வாடிப்பட்டி, அக். 25-
வடுகபட்டியில் பாழடைந்த பழைய ஊராட்சி அலுவலகத்தை அகற்ற வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கு தேசிய நெடுஞ்சாலை அருகே புதிய ஊராட்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதனருகே பயன்படுத்தப்பட்ட பழைய அலுவலகம் காலாவதியாகி விட்டதால் கைவிடப்பட்டது.
தற்போது பல இடங்களில் விரிசல் விழுந்தும், காரை பெயர்ந்தும், எந்நேரமும் விழும் நிலையிலும் உள்ளது. தெரு நாய்கள், விஷ ஜந்துகளின் வசிப்பிடமாக மாறி வருகிறது. ஊராட்சி அலுவலகத்திற்கு வருவோர் முகம் சுளிக்கின்றனர். எனவே, இதனை அகற்றி அரசின் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என பலரும் வலியுறுத்துகின்றனர். ஒன்றிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாழடைந்த அலுவலகம் உடனே அகற்றப்படுமா? பொதுமக்கள் கோரிக்கை
