தமிழகத்தையே உலுக்கிய காவல்நிலைய மரணம்:4 நாட்களுக்குப் பிறகு எதிர்பாராத திருப்பம்

மதுரை, நவ. 19-
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், நான்கு நாட்களுக்குப் பிறகு அவரது உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன், அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்காக கடந்த 13ஆம் தேதி மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்ப
ட்டார். அங்கு இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடைபெற்ற
தாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் நிலையக் கழிவறையில் அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, தென்மண்டல ஐஜி உத்தரவின்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மூன்று நாட்களாகச் செக்கானூரணி காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட காவலர்களிடமும், சம்பவம் நடைபெற்ற இடத்திலும் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர், காவல்துறையினர் தாக்கியதால்தான் தங்களது கணவர் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டினர். சம்பந்தப்பட்ட காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும், அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து, கடந்த மூன்று நாட்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால், பாலகிருஷ்ண
னின் உடலைப் பெற்று
க்கொள்ள குடும்பத்தினர் மறுத்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது அவரது உடலைப் பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இன்று காலை 9 மணியளவில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ
மனையின் பிரேதப் பரிசோதனை மையத்திலிருந்து பாலகிருஷ்ணனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
நான்கு நாட்களுக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்ட குடும்பத்தினர், அதனைத் தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான அழகர்நாயக்கன்பட்டிக்குக் கொண்டு சென்று, இன்று பிற்பகல் 1 மணியளவில் நல்லடக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஒருபுறம், இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றும் விசாரணை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்விலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு
ள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரத்தில், குடும்பத்தினரின் குற்றச்சாட்டுகள் மற்றும் சிபிசிஐடி விசாரணை தொடர்ந்து கவனம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *