கழிவுநீரில் தத்தளிக்கும் மேலுார் அரசு மருத்துவமனை

மேலுார், நவ. 12-
மேலுார் அரசு மருத்துவமனையில் செப்டிக் டேங்க் நிரம்பி, கழிவுநீர் மருத்துவமனை வளாகம், பிணவறையில் தேங்குவதால் நோயாளிகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலுார் தாலுகா அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள், புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் செப்டிக் டேங்க் நிரம்பி கழிவு நீர் வெளியேறி மருத்துவமனை வளாகத்தில் ஆறாக ஓடுகிறது. நோயாளிகள் கூறியதாவது : சிகிச்சை பெறும் வார்டு பகுதியில் செப்டி டேங்க் தண்ணீர் வெளியேறி துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடாக காணப்படுகிறது. இதனால் படுக்கையில் இருந்து சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகிறோம். பிணவறை பகுதியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. நோய்க்கு சிகிச்சை பெறுவோர், பார்வையாளர்கள் மற்றும் இறந்தவரின் உடலை வாங்க வருவோருக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மருத்துவமனை நிர்வாகம் கழிவு நீரை வெளியேற்றி மருத்துவமனைக்கு வருவோரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். சி.எம்.ஓ., கலாமணி கூறுகையில், ‘‘கடந்த வாரம் செப்டிக் டேங்க் சுத்தம் செய்துள்ளோம். தற்போது மழையால் மீண்டும் நிறைந்துள்ளதால் சுத்தம் செய்யப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *