கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் விவகாரம்: தவெக அரசை கடுமையாக விமர்சித்த டி.டி.வி. தினகரன்

சென்னை, நவ. 25-
“கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்குத்தான்” என்பதைப் போல, கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் தவெக அரசு அம்பலப்பட்டு நிற்கிறது.
இனியாவது நடவடிக்கை எடுப்பாரா? அல்லது வழக்கம்போல் வேடிக்கை மட்டும் பார்ப்பாரா முதலமைச்சர் விஜய்? என அமமுக பொதுச்செயலா
ளர் டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் தனக்கு தேவையற்ற குறுஞ்செய்திகளை அனுப்பித் தொல்லை கொடுத்ததாக, மாவட்ட ஆட்சியர் காவல் கண்காணிப்பாளரிடம் முறையாகப் புகார் அளித்திருப்பதாக இன்று நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆனால், அப்படி ஒன்று நடக்கவே இல்லை, அது வெறும் வதந்தி, எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட அவதூறு, மாவட்ட ஆட்சியரே புகார் அளித்தால் விசாரிப்போம் என வாய்க்கு வந்தபடியும், மாவட்ட ஆட்சியரையே மிரட்டும் வகையிலும் பேசிக்கொண்டிருந்த தவெக அமைச்சரவையின் வெத்துவேட்டு பேச்சாள
ர்களும், வாய்ச்சொல் வீரர்களும் தற்போது உண்மை வெளிவந்தவுடன் மக்களிடம் அம்பலப்பட்டு நிற்கிறார்கள்.
அதேபோல, இரண்டு அமைச்சர் பதவிகளைப் பாதுகாப்பதற்காகப் பாவம், புண்ணியம் எனப் பேசிய கூட்டணிக் கட்சித் தலைவரும் தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்.
மாவட்டத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் ஆட்சியரிடம் அநாகரிகமாக நடந்துகொண்டு, தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில், தனது சொந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய முதலமைச்சரே, இதுவரை வாய் திறக்காமல் அவரைப் பாதுகாக்க முயன்றிருப்பது வெட்கக்கேடானது.
தவெக எம்.எல்.ஏ. தொடர்பான புகாரின் மீது அடிப்படை விசாரணையை மேற்கொள்ளத் தவறிய காவல்துறையைவிட, குற்றம் சாட்டப்பட்ட எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாகவும், பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு எதிராகவும் பேசிய ஆளுங்கட்சியினரின் குரூரமான மனநிலை மிகவும் ஆபத்தானது.
அரசு நிர்வாகத்தின் பெண் உயர் அதிகாரிக்கு தவெக எம்.எல்.ஏ. இத்தகைய இழிசெயலைச் செய்ததாகக் கூறப்படும் விவகாரம், சமூக வலைத்தளங்கள் தொடங்கி அரசியல் கட்சித் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், தேசிய மகளிர் ஆணையம், நீதிபதிகள் எனப் பல்வேறு நிலைகளைக் கடந்து, உயர்நீதிமன்றத்தின் மூலமாகத்தான் தீர்வு கிடைக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தரங்கெட்ட தவெக ஆட்சியில் சாமானிய பெண்களின் நிலை என்ன
வாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே மனம் பதறுகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவருக்கு ஆதரவாகவும், மக்களைத் திசைதிருப்பும் நோக்கிலும் பேசிய ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் விஜய்யை வலியுறுத்துகிறேன் என டி.டி.வி. தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்து
ள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *