ஓராண்டாக பூட்டிக்கிடந்த மதுரை மாநகராட்சி மேயர் அலுவலகம் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது

மதுரை, நவ.13-
மதுரை மாநகராட்சியில் திமுக மேயர் ராஜினாமா வால் ஓர் ஆண்டாக பூட்டிக் கிடந்த அவரது மேயர் அலுவலகம் முழுவீச்சில் சுத்தப்படுத்தப்பட்டு துணை மேயர் நாகராஜனுக்காக தயாராகி வருகிறது.
மதுரை மாநகராட்சியில் சொத்துவரி முறைகேடு புகார் காரணமாக திமுக மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன்வசந்த், உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டு
ள்ளனர். உதவி ஆணையர் உட்பட 18 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 5 மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். கணவர் கைது செய்யப்பட்ட பிறகு மேயர் இந்திராணியும் கடந்த 2025-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
புதிய மேயரை தேர்வு செய் வதில் திமுக நிர்வாகிகளிடையே ஒருமித்த கருத்து இல்லாததால் சட்டப்பேரவை தேர்தல் முடிந்த பிறகு புதிய மேயரை தேர்வு செய்யலாம் என கட்சித் தலைமை தள்ளிப்போட்டது. ஆனால், தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமாக அமைஓராண்டாக பூட்டிக் கிடந்த மேயர் அலுவலகம், தற்போது தயார் படுத்தப்பட்டு வருகிறது
யாததால், தற்போது வரை மேயர் பதவி காலியாக உள்ளது. இதனால் 3 கவுன்சிலர்கள் மட்டுமே உள்ள மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துணை மேயர் நாகராஜன், தற்போது பொறுப்பு மேயராக செயல்படுகிறார்.
துணை மேயரான புதிதில் மாநகராட்சி கல்வெட்டுகளில் தனது பெயரை சேர்க்க வலியுறு
த்தி பொதுவெளியில் போராட தொடங்கியதால் வேறு வழியில்லாமல் கல்வெட்டுகளில் துணை மேயர் பெயரையும் சேர்க்க ஆரம்பித்தனர். ஆனாலும், மாநகராட்சி நிர்வாகத்தில் கடந்த திமுக ஆட்சி முழுவதும் துணை மேயருக்கு முக்கியத்துவம் வழங்கப்படாம
லேயே இருந்தது
இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்கு பிறகு பொறுப்பு மேயராக செல்வாக்கு பெற்ற துணை மேயர் நாகராஜனுக்காக, ஓர் ஆண்டாக பூட்டிக் கிடந்த மேயர் அலுவலகம் சுத்தம் செய்து
தயார்ப்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் சிலர் கூறியதாவது : தமிழக அரசுக்கு வெளியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தருவதால் தற்போது திவக ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் நாகராஜன் எம்பி.சு.வெங்க
டேசன் செல்வாக்குடன் உள்ளார். ஆட்சியர் முதல் மாநகராட்சி ஆணையர் வரை அனைத்து துறை அதிகாரிகளும் அவரது பரிந்துரைகளுக்கும், ஆலோ சனைகளுக்கும் மிகுந்த முக்கிய யத்துவம் கொடுக்கின்றனர்.
அதனால், அவரது கட்சியைச் சேர்ந்த துணை மேயர் நாகராஜ னும், தற்போது மாநகராட்சியில் பொறுப்பு மேயராக அதிகாரமிக்க நபராக மாறியுள்ளார். திமுக ஆட்சியில் நான் புறக்கணிக் கப்பட்ட இடங்களில் தனது முக்கியத்துவத்தையும், செல் வாக்கையும் காட்டி வருகிறார். பொறுப்பு மேயராக மாநகராட்சி கூட்டங்களை நாகராஜன் நடத்த தொடங்கிய பிறகு மாநகராட்சியில் பொறுப்பு
மேயருக்கான அதிகாரங்களை கேட்டுப் பெற்று வருகிறார். அவரது ஆலோசனை இல்லாமல் எந்த நிகழ்ச்சிகளும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது.
தற்போது பொறுப்பு மேயராக துணை மேயர் அலு வலகத்திலேயே நாகராஜன் பணிகளை மேற்கொண்டு வருகிறார். தற்போதைய மாநகராட்சி நிர்வாகத்தின் பதவிக் காலம் வரும் பிப்ரவரி மாதம் நிறைவடைய உள்ளதால், இனி புதிய மேயர் நியமிக்க வாய்ப்பே இல்லை. அதனால் துணை மேயர் நாகராஜன், பொறுப்பு மேயராக மேயர் அலுவலகத்தில் பணிகளை தொடர விரும்பியுள்ளார். தனது விருப்பத்தை ஆணையர் பார்வைக்கு கொண்டு சென்ற நிலையில், அவரும், ஆட்சேபம் தெரிவிக்காததால் மேயர் அலுவலகத்துக்கு துணை மேயர் இன்ற மாற இருக்கிறார். அலுவலகத்தை சுத்தப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், என்று கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *