இடைத்தேர்தல் தொகுதிகளில் மட்டும் கவனம் ஏன்? முதல்வர் விஜய் மீது எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

சென்னை, நவ.4-
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்க வேண்டிய முதலமை
ச்சர், இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தேர்தல் பிரச்சா
ரத்தைத் தொடங்கியு
ள்ளதாக அதிமுக பொது
ச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
மேலும், அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டி
யுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் முதலமைச்சர் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியிலும் நிலவும் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், எதிர்காலத்தில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது தேர்தலை மையமாகக் கொண்ட நடவடிக்கையாகவே தெரிகிறது என்று விமர்சித்தார்.
தமிழகத்தின் பொரு
ளாதார வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிக்க வேண்டிய நிலையில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் இல்லை என்றார். பல மாநிலங்களில் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் வெறும் 3 சதவீத வளர்ச்சி மட்டுமே இருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மாநிலத்தின் நிர்வாகத் திறன் குறைபாடே வருவாய் இழப்புக்குக் காரணம் என்றும், இதனால் அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்ற ஆறு மாதங்களில் அத்தியா
வசியப் பொருட்களின் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளதாகவும், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். இதேபோல் பருப்பு, சமையல் எண்ணெய், புளி உள்ளிட்ட மளிகைப் பொருட்களின் விலைகளும் உயர்ந்துள்ளன. ஒட்டுமொத்தமாக மளிகைப் பொருட்களின் விலை சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
தீபாவளி பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் அதிகம் வாங்கும் ஆவின் பொருட்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த அரசு எந்தவிதமான உரிய நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், நிர்வாகக் குறைபாடுகளைச் சரிசெய்வதற்குப் பதிலாக தேவையற்ற விவகா
ரங்களைப் பேசி காலத்தை வீணடிப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
தமிழகத்தின் நிர்வாகம் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்ப
ட்டுள்ளதாகவும், அத்தியாவசியப் பொரு
ட்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாத அரசாக தற்போதைய அரசு செயல்படுவதாகவும் அவர் தனது பேட்டியில் குற்றம்சாட்டினார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் சென்று மக்களின் குறைகளைக் கேட்க வேண்டிய முதலமை
ச்சர், இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்புள்ள தொகுதிகளில் மட்டும் நலத்திட்ட உதவிகள் வழங்கி தேர்தல் பிரச்சா
ரத்தைத் தொடங்கி
யுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமை
ச்சருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்து
ள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *