தமிழ்நாட்டில் உளவுப்பிரிவு என ஒன்று உள்ளதுஅது தூங்குகிறதா? செயலிழந்து விட்டதா?
சென்னை, அக்.25-ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட வேண்டும் என்றால், அங்குள்ள காவல்துறைக்கு “கண்களாகவும் காதுகளாகவும்” செயல்பட வேண்டியது உளவுத்துறைதான்.ஒரு குற்றம் நடப்பதற்கு முன்பே அதுபற்றிய தகவல்களை ரகசியமாகச் சேகரித்து, உயர் அதிகாரிகளுக்கும் அரசுக்கும் முன்னெச்சரிக்கை வழங்கி, அசம்பாவிதத்தைத் தடுப்பதே உளவுத்துறையின் தலையாய பணி.ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக அரங்கேறி வரும் தொடர் குற்றங்கள், மாநில உளவுத்துறை தன் அடிப்படைப் பணியில் இருந்து முற்றிலும் விலகிவிட்டதோ என்ற வலுவான சந்தேகத்தை எழுப்பியுள்ளன. வாலாஜாபேட்டை…
