கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீது அதிமுக பெண் நிர்வாகி புகார்: குற்றவியல் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி, நவ. 13-
கள்ளக்குறிச்சி தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள்விக்னேஷ் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக நிர்வாகி சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் பத்மஜாவுக்கு, அதே தொகுதியின் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாசமான வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், மதுபோதையில் ஆட்சியரின் இல்லத்திற்குச் சென்று பா@யல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த சம்பவத்திற்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு நிர்வாகியான திரிசூலி சென்னை டிஜிபி அலுவலகத்தில் இந்த விவகாரம் குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மனுவில், ‘கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியும், மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேலதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது உடனடியாகக் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் வலியுறுத்தப்ப
ட்டுள்ளது.
இதனிடையே, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், தன்மீ
தான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அரசு அதிகாரிகள் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், எதிர்க்கட்சிகள் அரசியல் காழ்ப்புணர்ச்சி
யுடன் சமூக வலைத்த
ளங்களில் பொய்யான வதந்திகளைப் பரப்புவதாகவும், இது குறித்துத் தானும் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *