யார் இந்த எம்.வி.முரளிதரன்? மணிப்பூர் கலவரத்திற்குவித்திட்டவர்: பதவி வழங்கிய தவெக அரசு

சென்னை, நவ. 13-
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி எம்.வி. முரளிதரன் நியமனம் செய்து தமிழக அரசு உத்திரவிட்டு
ள்ளது.
இந்நிலையில் மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன் என குறிப்பிட்டு, நாம் தமிழர் கட்சி இடும்பாவனம் கார்த்திக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ள மணியம்பட்டு கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு பிறந்தவர். மணியம்பட்டு வஜ்ஜிரவேலு முரளிதரன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீதித்துறையில் பணியாற்றி வந்தார்.
தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.வி. முரளிதரனைத் தமிழக அரசு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10, 2026) நியமித்துள்ளது.
இதற்கான அரசாணையை சமூக நீதி துறை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி, ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்கும் நாளிலிருந்து மூன்று ஆண்டுகள் அல்லது அவருக்கு 75 வயது நிறைவடையும் வரை, இவற்றில் எது முதலில் வருகிறதோ அதுவரை அவர் பதவியில் இருப்பார் என தெரிவித்துள்ளார்.
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு,மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முரளிதரனை தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்திருக்கிறது தவெக அரசு என விமர்சித்துள்ளார்.
பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பளித்து, மணிப்பூர் கலவரத்துக்குக் காரணமான ஓய்வுபெற்ற நீதிபதி வி.எம்.முரளிதரனை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவராக நியமித்திருப்பது குறித்து சமூக நீதி அமைச்சர் வன்னி அரசின் கருத்தென்ன? என கேள்வி எழுப்பிய அவர், வாய்திறந்துக் கண்டிக்கத் துப்பு இருக்கா? என கடுமையாக விமர்சித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக எம்.வி. முரளிதரன் நியமிக்கப்பட்டார். அங்கு 3 ஆண்டுகள் பணியாற்றிய அவர், அதன்பின்னர், கடந்த 2019ஆம் ஆண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் முரளிதரன் பொறுப்பேற்றார்.
இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்தினருக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி எம்.வி. முரளிதரன் விசாரித்து தீர்ப்பளித்தார். அதில் மெய்தி சமுதாய மக்களுக்கு பழங்குடியின அஸ்தஸ்து வழங்குவது பற்றி பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார் நீதிபதி முரளிதரன். இந்த உத்தரவு மணிப்பூரில் பெரும் கொந்தளிப்பைக் கிளப்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *