ரூ.25 கோடியில் இ-பைக் தயாரிப்பு நிறுவனம்:முதல்வர் விஜய் திறந்து வைத்தார்

சென்னை, நவ. 13-
சென்னையை தலைமை
யிடமாக கொண்டு மணப்பாக்கத்தில் செயல்படும் Raptee.HV நிறுவனம், மின்சார கார் தொழில்நுட்பத்தை இருசக்கர வாகனங்களில் அறிமுகப்படுத்துவதில் முன்னோடியாக விளங்கும் முழுமையான மின்சார மோட்டார் சைக்கிள் (இ-பைக்) தயாரிப்பு நிறுவன
மாகும்.
டெல்சா, விப்ரோ மற்றும் சர்வதேச வாகன தொழில்நுட்ப நிறுவன
ங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட தமிழ்நாட்டில் உள்ள எம்ஐடி, குரோம்பேட்டை மற்றும் என்ஐடி, திருச்சி பொறியியல் கல்லூரிகளில் பயின்ற தமிழ்நாட்டை சேர்ந்த பொறியாளர்களால் தொடங்கப்பட்ட இந்நிறு
வனம், தனது பிரத்யேக தொழில்நுட்ப தளத்தை உருவாக்கியுள்ளது.
இதன்மூலம் உயர் மின்னழுத்த தொழில்நுட்ப
த்தை மின்சார மோட்டார் சைக்கிள்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனத்தின் டி30, இந்தியாவின் முதல் உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் ஆகும். இது 240வி மின்னழுத்த கட்டமைப்பையும், மின்சார கார்களுக்கான சிசிஎஸ்2 பொது டிசி விரைவு மின்னேற்ற தரநிலையுடன் இணக்கத்தன்மையையும் கொண்டுள்ளது.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நிதி பங்களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முன்னோடி உயர் மின்னழுத்த மின்சார மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Raptee.HV நிறுவனம் சென்னை, பெருங்குடி ஓஎம்ஆர் சாலையில் நிறுவியுள்ள மூன்று தளங்களை கொண்ட புதிய முதன்மை அனுபவ மையத்தை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.
இங்கு வாடிக்கையா
ளர்கள் மோட்டார் சைக்கிளை நேரில் பார்வையிடுவதுடன், அதன் 240வி உயர் மின்னழுத்த கட்டமைப்பு மற்றும் அதனை இயக்கும் நவீன தொழில்நுட்பங்களை பற்றி அறிந்துகொள்ளலாம். மேலும், நிறுவனத்தின் தொழில்நுட்ப குழுவினருடன் கலந்துரையாடவும், சோதனை ஓட்டம் மேற்கொண்டு மோட்டார் சைக்கிளின் செயல்திறன் குறித்த அனுபவத்தை நேரில் பெறுவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் புது யுக பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தனது புதிய ஸ்டாட்அப் முதலீட்டு கொள்கையை பயன்படுத்தி, தொடக்கமாக ராப்டீ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.25 கோடி கட்டாய மாற்றத்தக்க முன்னுரிமை பங்குகள் முறையில் முதலீடு செய்துள்ளது. மேலும், Agnikul Cosmos மற்றும் பல ஸ்டாட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளது.
இந்நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா, தலைமைச் செயலாளர் சாய்குமார், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கார்த்திகேயன், செயல் இயக்குநர் வாகே சங்கேத் பல்வந்த், ராப்டீ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அலுவலர் தினேஷ் அர்ஜூன், இணை நிறுவனர்கள் கீர்த்திவாசன், கார்த்திகேயன், புனித்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன