“முதலமைச்சர் விஜய் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” – நயினார் நாகேந்திரன்

சென்னை, நவ. 12-
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “பொது
மக்களுக்கும் பாதுகாப்பில்லை, ஆட்சியாளர்களுக்கும் பாதுகாப்பில்லை. சட்டம் – ஒழுங்கைச் சீரழித்த முதல்வர் ஜோசப் விஜய் உடனடியாகப் பதவி விலக வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், “கள்ளக்குறிச்சி மாவட்டப் பெண் ஆட்சியருக்கு, ஆளும் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் முறையற்ற எண்ணத்துடன் வாட்ஸ்அப் செய்தி அனுப்பியதாகவும், பின்னர் மதுபோதையில் அவரது இல்லத்திற்கே சென்று ரகளையில் ஈடுபட்டதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒரு மாவட்டத்தின் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வால் இந்த அச்சுறுத்தல் என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்னாவது? மாவட்ட ஆட்சித்தலைவருக்கே பாதுகாப்பில்லாத அளவிற்குத்தான் முதல்வர் ஜோசப் விஜய் இங்கு அலட்சிய ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்! பொதுவாக சமூக விரோதிகளிடமிருந்து பெண்களைக் காக்கத்தான் அரசுப் படைகள் தேவைப்படும்; ஆனால் தவெக ஆட்சியில், ஆளுங்கட்சியினரின் அத்துமீறல்களிலிருந்து பெண்களைப் பாதுகாக்கவே தனியாக ஒரு ‘சிங்கப்பெண் காவல் படை’ அமைக்க வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *