சென்னை, நவ. 12-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் வங்கிக் கணக்குகளில் இருந்து டிஜிட்டல் முறையில் 22 கோடியே 10 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணை தொடங்கியது.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் 14 கோடி ரூபாயும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்தில் 3 கோடியே 10 லட்சம் ரூபாயும், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 5 கோடி ரூபாயும் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் ெளியாகியுள்ளது. வங்கிக் கணக்குகளில் இருந்து ஊராட்சிகளுக்குப் பணம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளப் போர்ட்டலுக்குள் சைபர் குற்றவாளிகள் ஊடுருவி இந்தப் பணத்தைக் கையாடல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், வங்கிக் கணக்குகள் தொடர்பான மின்னஞ்சல்களை ஆய்வு செய்ததில், வங்கதேசம், அமெரிக்கா, கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சைபர் கும்பல் ஊடுருவியிருக்கலாம் என காவலர்கள் ந்தேகிக்கின்றனர். இந்நிலையில், புதுச்சேரி அரசு பல் மருத்துவக் கல்லூரி ஊழியர்களின் சம்பளப் பணம் 8 கோடியே 84 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேரை சைபர் கிரைம் காவலர்கள் கைது செய்துள்ளனர். தீபாவளியை முன்னிட்டு கடந்த 3-ஆம் தேதி சுமார் 300 ஊழியர்களுக்கான சம்பளப் பணம் கல்லூரி வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நிலையில், அன்றிரவே மொத்தப் பணமும் மாயமானது. இதுதொடர்பாக ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை, பொள்ளாச்சி, ஈரோடு மற்றும் கொல்கத்தாவைச் சேர்ந்த மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின்வங்கி கணக்குகளில் 22 கோடி மோசடி
