திருச்சி, அக். 28-
திருச்சி கிழக்கில் தவெக போட்டியிடுவதற்காக பல வியூகங்கள் செய்து வருகிறது. இந்த தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால் இடைத்தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் 5 தொகுதிகளிலும் தவெக பூர்வாங்க வேலையை தொடங்கிவிட்டது. இந்த தொகுதிகளில் களமிறங்கி இருக்கும் வியூக தவெகவின் அமைப்பாளர்கள் எங்கிருந்தெல்லாம் பிரச்சினை வெடிக்கும். யாரையெல்லாம் எந்த வழியில் சரிகட்ட முடியும் என சாட் போட்டுக்கொண்டு பணிகளை செய்து வருகின்றனர். திருச்சி கிழக்கு தொகுதியை ெபாறுத்தவரை முதல்வர் போட்டியிட்ட தொகுதி என்பதால் அங்கு போட்டியிடும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் தொகையை கூட வாங்கக்கூடாது என ஸ்கெட்ச் போட்டு வேலை செய்து வருகிறது.
இதே நேரத்தில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தி தவெகவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் தி.மு.க. சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அங்கு சுறுசுறுப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் 2 முன்னாள் அமைச்சர்களும் தவெகவை விட மும்முரமாக வியூகங்கள் அமைத்து செயல்பட ஆரம்பித்து விட்டார்கள். இவர்களை வெளியே நடமாட விட்டால் திமுக செய்யும் வியூகங்களை சமாளிக்க முடியாது என நினைத்து ஜூனியர் மந்திரி மகேஷை அவசர கதியில் லஞ்ச வழக்கில் அவரையும் தூக்கி உள்ளே வைத்து விட்டார்கள்.
அதே போல மற்றொரு முன்னாள் அமைச்சரான கேஎன். நேருவின் மீது ஏற்கனவே ஜாமின் மறுக்கப்பட்டதால் அவரும் இந்த வாரமோ அல்லது அடுத்த வாரமோ கைது செய்யப்படலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இருவர் மீதும் வழக்குகள் வாய்தாக்களில் இருந்தால் அதிலேயே கவனம் செலுத்துவார்கள். நாம் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்று தவெக நினைக்கிறது என அரசியல் நோக்கர்கள் கணிக்கின்றனர்.
திருச்சி கிழக்கு தொகுதியை கைப்பற்ற திமுகவை முடக்க தவெக முடிவு
