மதுரை மாநகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல், பணிப் பாதுகாப்பில்லை: நாள்தோறும் கூட்டம் போடும் ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா?

மதுரை, அக். 20-

மதுரை மாநகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல், மிரட்டல் சம்பவங்களால் பணியில் பாதுகாப்பில்லை என கொந்தளிக்கின்றனர். கமிஷனர் கறார் நடவடிக்கை எடுத்தால் தான் கட்டுப்படுத்த முடியும் என எதிர்பார்க்கின்றனர். நேற்று முன்தினம் சுகாதார ஆய்வாளர் ரமேஷ் தாக்கப்பட்டார். இதன் பின்னணியில், சுகாதாரப் பணிகளில் குறைந்த நபர்களை கணக்கு காட்டி அதிக நபர்களுக்கு சம்பளம் வாங்கும் முறைகேடை தட்டிக் கேட்க துணிந்ததால் ஆய்வாளர் தாக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர் தினக்கூலி பணியாளர் என்றாலும், அவர் தொழிலாளர் சங்க நிர்வாகியாக இருப்பதால் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி தயங்குகிறது.
இதுபோல் சில நாட்களுக்கு து ா ய் முன் மை ப் அப்போது பணிக்கு யாரும் பணியாளர்களின் போராட்டம் நடந்தது. செல்லக் கூடாது என சங்க நிர்வாகி ஒருவர் ஆடியோ வெளியிட்டார். அவரது ஆடியோ பதிவில் கோரிக்கையை நிறைவேற்ற வரை கடைசி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என போராட்ட கொள்கை ரீதியான கருத்தை ஏற்கலாம். ஆனால் ‘வேலைக்கு அழைக்கும் டெக்னீசியன்களை என அடியுங்கள்’ வன்முறையை துாண்டும் பேச்சை மாநகராட்சி பொறியாளர்கள் கண்டித்தனர்.”
சில நாட்களுக்கு முன் பெண் உதவிப்பொறியாளர் கணவருடன் டூவீலரில் சென்றபோது தாக்கப்பட்டார். அதன் பின்னணியிலும் அந்த பெண் பொறியாளரின் நேர்மையான பணிக்கு எதிரானவர் களின் கைவரிசை இருக்கலாம் சந்தேகம் என வலுத்துள்ளது.
மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது: பணியின்போது மாநகராட்சி பொறியாளர், சுகாதார அலுவலர் உள்ளிட்டோர் தாக்கப்படுவது, மிரட்டப்படுவது சமீபமாக போன்றவற்றை கேடயமாக தொடர்கிறது. தாக்குதலில் ஈடுபடுவோர் பெரும்பாலும் சங்கம், சமூகம் பயன்படுத்துபவராக உள்ளனர். தங்களுக்கு சாதகமாக குறிப்பிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்ய புகார் கொடுக்கின்றனர். அவர்கள் புகாரில் உண்மை இ ரு ந் த சம்பந்தப்பட்டோர் ல் தண்டிக்கப்பட வேண்டியவர்களே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் பழிவாங்கும் நோக்கில் வேண்டுமென்றே புகார் கொடுத்து மிரட்டுவோரை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயம் நன்கு “தெரிந்தும் மாநகராட்சி அதிகாரிகள் ‘நமக்கேன் வம்பு’ என்று எதையும் கண்டுகொள்வதில்லை. சமீபத்தில் கவுன்சிலர் ஒருவர் மீது இவ்வாறான வழக்கு பாய்ந்தது. அவர் நீதிமன்றம் சென்று, ஆதாரங்களை சமர்ப்பித்து, குற்றச்சாட்டு பொய் என நிரூபித்து தப்பினார். எனவே இதுபோன்று வழக்கை காரணம் காட்டி மிரட்டல், தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கமிஷனர் கவுரவ் குமார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *