மதுரை, நவ. 25-
மதுரை மற்ற மாநகராட்சி
களில் இருந்து தாராளமாக பதவி உயர்வுடன் பணியிட மாறுதலில் மதுரை மாநகராட்சிக்கு பலர் வந்து பணிபுரியும் நிலையில், மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் அனைத்து தரப்பு பணியாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்காததுடன் கடும் பணிச்சுமையுடன் பலவிதமான குற்றச்சாட்டு குறிப்பாணைகளும், பொருத்தமற்ற தண்டனை
கள் வழங்குவது கடும் மனச்சுமையை அளிப்பதாக ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மதுரை மாநகராட்சியில் ஓட்டுநர்கள் மட்டுமின்றி, முக்கிய அலுவலகப் பிரிவுகளில் உள்ள நிரந்தர பணியிடங்கள் நீக்கப்பட்டு ஒப்பந்தப் பணியாளர்களே நியமிக்கப்படுகின்றனர். மைய அலுவலகங்கள், மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகம் வரை போதிய எண்ணிக்கையில் ஊழியர்கள் இல்லாததால் கூடுதல் பணிச்சுமையோடு அலுவலர்கள், அதிகாரிகள் பணிபுரிகின்றனர்.
பதவி உயர்வு இல்லாமல் ஒரே பதவியில் நீண்ட நாள் பணிபுரிவதாகவும், 10 முதல் 15 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அனைத்து சங்க நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போது மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் பணியாளர்கள், அலுவலர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது அனைவருக்கும் நன்றாக தெரியும். கீழ்நிலை பணியாளர்கள் முதல் அலுவலர்கள் வரை அனைவரும் மிகக் கடுமையாக பணியாற்றியும் பல்வேறு வகையில் பாதிக்கப்படுகிறார்கள் பழிவாங்கப்படுகிறார்கள். மற்ற மாநகராட்சிகளில் இருந்து பதவி உயர்வு பெற்று பலர் மதுரை மாநகராட்சிக்கு வந்து பணிபுரிகிறார்கள்.
ஆனால், மதுரை மாநகராட்சியை சார்ந்த எந்தத் துறையினருக்கும் பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. நியாயமான கோரிக்கை மனு அளித்தால்கூட, ஏதாவது ஒரு குற்றச்சாட்டு குறிப்பாணையை வழங்கி, அதை நிலுவையில் வைத்து பதவி உயர்வு மறுக்கப்படுகிறது.
பொறியியல் பிரிவு பணியாளர்கள் 25 முதல் 30 ஆண்டுகளாக ஒரே பணியில் உள்ளனர். அவர்களுக்கு ஒருமுறையாவது பதவி உயர்வு வழங்கியிருக்க வேண்டும். தொழில்நுட்ப உதவியாளர்கள் 10 முதல் 15 ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாகவே உள்ளனர். அவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பொறியியல் மற்றும் சுகாதாரப் பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் ஒப்பந்தப் பணியாளர்களாக உள்ளவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு ஏராளமான பணிச்சுமைகளை கொடுத்து, நடைமுறைக்கு சாத்தியமில்லாத உத்தரவுகளை பிறப்பித்து பணியாற்ற வலியுறுத்துகிறார்கள்.
பொறியாளர்களுக்கு எண்ணற்ற பணிச்சுமைகளை கொடுக்கின்றனர். அதையும் சகித்துக்கொண்டு வேலை செய்தாலும், வேண்டுமென்றே விதவிதமான குற்றச்சாட்டு குறிப்பாணைகளையும், பொருத்தமற்ற தண்டனைகளையும் வழங்கி பதவி உயர்வு மறுக்கப்படுகிறது.
எழுத்தர், கண்காணிப்பாளர், நிர்வாக அலுவலர்களுக்கு போதிய தகுதியிருந்தும் குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கி பதவி உயர்வு மறுக்கப்படுகிறது. வருவாய் உதவியாளர்களுக்கு தாங்க முடியாத பணிச்சுமைகளை கொடுத்து, குற்றச்சாட்டு குறிப்பாணை மற்றும் தற்காலிக பணிநீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
ஓட்டுநர்களுக்கு எவ்வித பதவி உயர்வோ, பிற பலன்களோ வழங்கப்படுவதில்லை. நகர சுகாதார செவிலியர்களுக்கு உரிய பதவி உயர்வு வழங்கப்படாததால் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். இதற்கெல்லாம் முற்றுப்பு
ள்ளி வைக்க வேண்டும். ஏற்கெனவே அனைத்து சங்க கிளை சார்பாக மனு அளித்தும் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இக்கோரிக்கைகள் குறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்திடம் தெளிவாக எடுத்துரை
க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோரிக்கை பிரச்சார விளக்கக் கூட்டம் நேற்று மாலை தல்லாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி அண்ணா மாளிகை முன் நடந்தது. மதுரை மாநகராட்சி அனைத்து துறை நிர்வாகி
களும், உறுப்பினர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
அனைத்து பிரிவுகளிலும் பலவிதமான குற்றச்சாட்டு குறிப்பாணைகள்:துணை ஆணையாளர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அதிருப்தி-இதற்கெல்லாம் யார் காரணம்?
