உச்ச நீதிமன்றத்திற்கு எதிரான போராட்டம் அல்ல; மதுரையில் மத நல்லிணக்க ஆர்ப்பாட்டம்வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

மதுரை, நவ. 24-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தினமான, செவ்வாய்கிழமை தீபம் ஏற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரையில் மத நல்லிணக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மத நல்லிணக்கத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதை மதுரை மத நல்லிணக்க மக்கள் கூட்டம் சார்பாக வரவேற்கிறோம். நேற்று மாலை 4 மணிக்கு மதுரையில் எங்கள் கூட்டமைப்பின் சார்பில் அமைதி, நல்லிணக்கத்தை வலியுறுத்தி ஒரு பேரணி நடந்தது. இதில் வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ஜவஹருல்லா, சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றனர். எங்கள் பேரணிக்கு தடை விதிக்கிறோம் என்று காவல்துறையில் இருந்து அறிவிப்பு வந்தது. இதே தமிழ்நாடு காவல்துறை, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு அனுமதி கொடுத்தனர்.
மேலும், நீங்கள் பேரணி நடத்தினால் சங்க் பரிவார் மற்றும் பா.ஜ.க பேரணி நடத்தும் என்று அனுமதி மறுப்பிற்கான காரணமாக கூறினார்கள். தமிழ்நாடு அரசு மத நல்லிணக்கத்தை வலியுறுத்துகிறது, காவல்துறை மத நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்று கூறினர். அப்படி இருக்கும் பொழுது எங்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பது அரசியல் சட்டப்படி சரியா? இதே கேள்வியை காவல்துறையிடம் வைத்தோம்.
இதையடுத்து, காவல்துறை காந்தி மியூசியம் முன்பாக இருக்கும் தமிழ் சங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தனர். எனவே, திட்டமிட்டப்படி மதுரை மத நல்லிணக்க கூட்டத்தின் படி, ஆர்ப்பாட்டமாக தமிழ் சங்கத்தின் முன்பாக நடைபெற்றது. இது உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக நடக்கவில்லை’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *