ஜெயலலிதா, ஸ்டாலின் ஆட்சியிலேயே நடக்காத சம்பவம்: அமைச்சர்களால் முதல்வர் விஜய்க்கு ஆபத்துஅமித் ஷா கையில் முக்கிய ஆதாரம்

புதுடெல்லி, நவ. 24-
போலீஸ் ஸ்டேஷனுக்குள் புகுந்து அமைச்சர்கள் நடத்துகிற ஆய்வுகள் விவகாரம் டெல்லி வரை சென்றுள்ளது. போலீஸ் உயர் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள் என போலீஸ் துறையோட கீழ்நிலை அதிகாரிகளும் தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது கடும் கோபத்தில இருக்கிறார்கள் என போலீஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதுவரை எம்ஜிஆர், கலைஞர், ஜெயலலிதா, ஓபிஎஸ், எடப்பாடி, ஸ்டாலின் என ஆட்சி செய்த எந்த முதல்வரும் போலீஸ் துறையை தங்களிடமே வைத்திருந்தார்கள்.
அப்போது எந்த ஒரு அமைச்சரும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய் மேற்பார்வையிடுவதற்கு பயப்படுவார்கள். இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதா காலத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போனை போட்டு ஆளுங்கட்சி தோரணையில் பேசக்கூட கட்சி அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் தயங்குவார்கள். கடந்த திமுக ஆட்சியில் முக்கியமான அமைச்சராக இருந்த கே.என்.நேரு ஒரு சந்தர்ப்பத்தில் டென்ஷன் ஆகி ஒரு முக்கியமான போலீஸ் அதிகாரிக்கு போனை போட்டு கொஞ்சம் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார். அடுத்த சில நிமிஷங்களில் அப்போதைய முதலமைச்சர் ஆபீஸில் இருந்து நேருவுக்கு ஒரு போன் போயிருக்கிறது.
உங்களுக்கு போலீஸ் அதிகாரிகளிடம் ஏதாவது சொல்லணும் அப்படின்னா முதலமைச்சர் ஆபீஸ்ல சொல்லுங்க. நீங்க நேரடியா அதிகாரிக்கு போனை போட்டு எச்சரிக்க தேவையில்லை என அந்த துறையோட அமைச்சர் முதலமைச்சர் என்பது உங்களுக்கு தெரியாதா? என எச்சரித்ததாக ஒரு தகவல் உண்டு. இப்படிப்பட்ட ஆட்சிகளை பார்த்த போலீஸ் அதிகாரிகள் இப்போது முதலமைச்சர் விஜய் ஆட்சியில்அவரே போலீஸ் துறையை வைத்திருந்த போதும் ஆதவ் அர்ஜுனா, காந்திராஜ் மாதிரியான அமைச்சர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் அங்கே ஆய்வு பண்றதும் போலீஸ் அதிகாரிகளை கேள்வி கேட்கறதும் வீடியோக்களாக வெளியே வந்து போலீஸ் வட்டாரத்துக்குள் ஒரு அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு மாவட்ட அமைச்சர் விஜய் பாலாஜி, மாவட்ட பெண் எஸ்பியை ராத்திரி நேரத்தில் தன் வீட்டுக்கு விளக்கங்கள் கேட்கறதுக்காக கூப்பிட்டார் என ஒரு சர்ச்சையும் கிளம்பி இருக்கிறது. முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஆய்வு நடத்த யாருக்கெல்லாம் அதிகாரம் இருக்கு என்பது ஒரு முக்கியமான விஷயம். போலீஸ் ஸ்டாண்டிங் என ஒரு விதிமுறை இருக்கிறது. அதன்படி ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய் ஆய்வு நடத்துவதற்கு அந்த மாவட்ட எஸ்பிக்கும் மேஜிஸ்ட்ரேட்டுக்கும் மட்டுமே அனுமதி இருக்கிறது. அதுவும் என்ன விவகாரம் என்கிற ஒரு பர்ஸ்பெக்ஷன் அடிப்படையில் மட்டுமே ஆய்வு செய்ய முடியும்.
மேலும் ஒரு மாவட்ட எஸ்பி இன்னொரு மாவட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனையும் ஆராய முடியாது.
சட்டம்- ஒழுங்கு டிஜிபி மட்டுமே மாநிலத்தோட எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு வேண்டுமானாலும் போய் ஆய்வு நடத்த முடியும். அவரை தவிர போலீஸ் துறை அமைச்சர் எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு போயும் ஆய்வு செய்யலாம். அதாவது முதலமைச்சர். இதுதான் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு நடத்துவதற்கான அடிப்படை விதிகள். ஆனா, இதெல்லாம் அப்பட்டமாக மீறப்பட்டு, அமைச்சர்களே போலீஸ் ஸ்டேஷனுக்குள் போய் ஆய்வு நடத்துவது என்பது, போலீசார் வட்டாரத்துக்குள்ளேயே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐபிஎஸ் அதிகாரிகள் மத்தியில் இது ஒரு முக்கியமான விவாத பொருளாகவும் இப்போது மாறியிருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் இந்த விவகாரம் சில முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது என்பது தான் இதன் உச்சக்கட்ட கிளைமாக்ஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *