திண்டுக்கல், நவ. 22-
மருந்துகள் சப்ளையில் தாமதம், காலாவதியான மருந்துகளை திரும்பப் பெறாதது உள்ளிட்ட நிர்வாகக் குளறுபடிகளால் திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் முடங்கும் அபாயத்தில் உள்ளன.
ஏழை, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் ஜெனரிக் மருந்துகளுக்கு 75 சதவீதம் வரையும், இதர மருந்துகளுக்கு 25 சதவீதம் வரையும் தள்ளுபடி விலையில் மருந்துகளை வழங்கும் பொருட்டு ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் 2025 பிப்., 24ல் துவக்கப்பட்டது.
கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில், நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு, கூட்டுறவுச் சங்கங்கள், தனியார் தொழில்முனை
வோர் வழியாக மருந்த
கங்கள் திறக்கப்பட்டன. முதற்கட்டமாக ஆயிரம் மருந்தகங்கள் முறையே திண்டுக்கல் மாவட்டத்தில் 31 முதல் 40 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களுக்கான மாத்திரைகள் குறைந்த விலையில் கிடைத்ததால் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இருந்தது. ஆனால் திட்டம் துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே மருந்து விநியோகத்தில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால் இம்மருந்தகங்கள் பெயரளவுக்கு செயல்படும் கடைகளாக மாறி உள்ளன.
இதற்கிடையில் அரசிடம் ரூ.3 லட்சம் மானியம் பெற்று, சொந்த முதலீட்டில் உரிமம் பெற்ற தனியார் தொழில்முனைவோர்கள் நஷ்டம் காரணமாக கடைகளை மூடிவிட்டு வேறு தொழிலுக்குச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள், பயனாளிகள் கூறியதாவது:
மருந்துகள் தீர்ந்தால் 48 மணி நேரத்தில் சப்ளை செய்ய வேண்டும். ஆனால் ஆர்டர் செய்த மருந்துகள் வந்து சேரவே பல வாரங்கள் ஆகிறது. இதனால் மருந்து தேடி வரும் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
தனியார் மொத்த விற்பனையாளர்களிடம் மருந்துகளை வாங்கினால் காலாவதி தேதிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு மருந்துகளைத் திருப்பிக் கொடுத்து மாற்று மருந்துகளை பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால் கூட்டுறவு இணையம் மூலம் வழங்கப்பட்ட மருந்துகளை திரும்பப் பெறுவதில் தெளிவான நடைமுறை இல்லாததால் விற்காத, காலாவதியான மருந்துகளின் நஷ்டம் முழுவதையும் உரிமம் பெற்றவர்களை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
காலாவதியான மருந்துகளின் நஷ்டம், கடை வாடகை, மின்கட்டணம், மருந்தாளுநர் சம்பளம் என அனைத்தும் முதலீட்டாளர் தலையில் விழுவதால் வேறு வழியின்றி கடைகளை மூடிவிட்டோம் என்றனர்.
பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமைந்த இத்திட்டம் நிர்வாகக் குளறுபடியால் முடங்கும் அபாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு மருந்தகங்களின் நிர்வாகத்தில் ஏற்பட்டி
ருக்கும் சுணக்கத்தை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் முடங்கும் அபாயம்
