போலீஸ் ஸ்டேஷனில் டிரைவர் சாவு, காவல் நிலைய சிசிடிவி காட்சிகளை குடும்பத்தினர் காண்பதற்கு அனுமதி: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை, நவ. 22-
போலீஸ் ஸ்டேஷனில் லாரி டிரைவர் உயிரிழந்த விவகாரத்தில், காவல் நிலைய சிசிடிவி காட்சி
களை குடும்பத்தினர் காண்பதற்கு ஐகோர்ட் கிளை அனுமதி வழங்கி
யுள்ளது.
தேனியைச் சேர்ந்த சுதா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘செக்கானூரணி போலீஸ் ஸ்டேஷனில் எனது கணவர் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. எனவே செக்கனூரணி, வாலாந்தூர், உசிலம்பட்டி நகரம், தாலுகா ஆகிய காவல் நிலையங்களில் பாலகிருஷ்ணனிடம் விசாரித்த போது பதிவான சிசிடிவி காட்சி பதிவுகளை பாதுகாத்து வைக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், ‘‘4 காவல் நிலையங்களின் சிசிடிவி பதிவுகள் பாதுகாப்பாக உள்ளது. இந்த பதிவுகள், டிஸ்க்கில் பதிவு செய்யப்பட்டு, டிஎஸ்பி இடம் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘காவல் நிலையத்தின் ஒரு குறிப்பிட்ட சிசிடிவி பதிவுகளை மட்டும் ஏன் கசிய விட்டீர்கள்? மனுதாரர்களுக்கு சிசிடிவி காட்சிகளை வழங்க மறுப்பது ஏன்’’ என்றார். அரசு தரப்பில், ‘‘பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளியாகி இருக்கலாம்’’ என கூறப்பட்டது.
அப்போது நீதிபதி, ‘‘அப்படி என்றால் முழு வீடியோவும் ஏன் வெளியிடவில்லை? ஏன் பட டீசர் போல குறிப்பிட்ட காட்சிகள் மட்டும் வெளியிடப்பட்டது. இந்த சிசிடிவி பதிவுகளை மனுதாரர் மற்றும் வழக்க
றிஞர் பார்க்க வேண்டும். 4 காவல் நிலையங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளை நவ. 23ம் தேதி மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் வழக்கறிஞர் பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வீடியோ காட்சிகளை பதிவு செய்யக் கூடாது. குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்திக்கக் கூடாது’’ என நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி மனுவை முடித்து வைத்தார்.
குடும்பத்தினரை மிரட்டுவதா? கனிமொழி எம்பி கேள்வி டிரைவர் பாலகிருஷ்ணின் மனைவி சுதா மற்றும் குடும்பத்தினர், மதுரை மாவட்டம், பரவையில் வசிக்கின்றனர். அவர்களை நேற்று திமுக துணைப்பொதுச்செய
லாளர் கனிமொழி எம்பி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறாமல், யார் காரணம் என்பதைக் கண்டறிந்து, தவறு செய்தவர்கள் மீது கடுமை
யான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, அந்தக் குடும்பத்தினரிடம் பேரம் பேசுவதும், அவர்களை மிரட்டுவதும், இந்த விவகாரம் வெளியில் வராமல் தடுப்பதற்கான முயற்சிகளும் நடை
பெறுவதாகத் தெரிகிறது என்று கண்டனம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *