திடீர் மோதல்: செய்தியாளர்கள் சந்திப்பை பாதியிலேயே முடித்துவிட்டு கிளம்பிய ராஜேந்திர பாலாஜி

சென்னை, நவ. 20-
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 90ஆம் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு தரப்பினரிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பை பாதியிலேயே முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் தலையிட்டு இரு தரப்பினரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதாவது வீரத்தமிழர் மக்கள் கழகம் என்ற அமைப்பின் தலைவர் பந்தல்ராஜாவின் ஆதரவாளர்கள் மற்றும் அன்னபூர்ணா ஆதரவாளர்கள் ஆகியோரிடையே மாலை அணிவித்த விவகாரம் தொடர்பாக மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *