மருத்துவம், மக்கள் நல்வாழ்வு துறை சார்பில்ரூ.210.14 கோடியில் கட்டப்பட்ட கட்டிடங்களைகாணோலி மூலம் முதல்வர் விஜய் திறந்து வைத்தார்

சென்னை, நவ. 20-
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் ரூ.210.14 கோடி செலவில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனை 134 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் ரூ.54 கோடி செலவில் இரண்டு தொகுதிகள் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் கட்டப்பட்டு 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவம
னையாக மேம்படுத்த
ப்பட்டு, ரூ.5 கோடியே 4 லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்களும் நிறுவப்பட்டு, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதை முதல்வர் விஜய் நேற்று தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

  • கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி அரசு மருத்துவமனை 50 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு 6 கோடியே 37 லட்சம் செலவில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டதை முதல்வர் திறந்து வைத்தார்.
  • ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மற்றும் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடம், சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம், நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை,
    டயாலிசிஸ், தீவிர சிகிச்சை, உயர் சார்பு சிகிச்சை, அறுவை சிகிச்சை மேற்கொள்ள 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் என மொத்தம் ரூ.210.14 கோடி கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
    நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ், தலைமைச் செயலாளர் சாய்குமார், துறை செயலாளர் தாரேஸ் அகமது, தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அனீஷ் சேகர், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் எஸ்.உமா, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *