மதுரை, நவ. 25-
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா பிறப்பித்த 144 தடை உத்தரவுக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அந்த உத்தரவைத் தயாரித்த விதத்தைக் குறிப்பிட்டுக் கடுமையாக விமர்சித்து
ள்ளது.
தடை உத்தரவு நகலை வாசித்துக் காட்டிய நீதிபதிகள், இந்த உத்தரவை யார் தயாரித்தாரோ அவரைப் பாராட்ட வேண்டும்.. மிகத் திறமை
யாகத் தயாரித்துள்ளார்கள் என நக்கலாகத் தெரி
வித்துள்ளனர்.
மதுரை திருப்பரங்கு
ன்றம் மலை உச்சியில் சிக்கந்தர் தர்கா அருகே அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீண்ட காலமாகச் சர்ச்சை நிலவி வருகிறது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை கடந்த நவம்பர் 20-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார் மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, ஒரு முக்கிய இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது.
அதன்படி, 2026-ம் ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருநாளையொட்டி, கோவில் நிர்வாகத்தின் சார்பில் அங்கீகரிக்கப்பட்ட குழுவினர் அந்தத் தூணில் தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. மேலும், தேவைப்பட்டால் மத்தியப் பாதுகாப்புப் படையினரின் உதவியைப் பெற்று, முழுப் பாதுகாப்போடு இந்த நிகழ்வை நடத்தி முடித்து, 3 நாட்களுக்குள் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டி
ருந்தது.
இந்நிலையில், சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டப் பிரிவு 163-ன் கீழ் (பழைய 144 தடை உத்தரவு) நவம்பர் 23-ம் தேதி இரவு 9 மணி முதல் நவம்பர் 25-ம் தேதி காலை 10 மணி வரை மதுரை மாவட்டம் முழுவதும் தடை உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின்படி, பொதுமக்கள் கூட்டமாகக் கூடவோ, ஊர்வலம் செல்லவோ, திருப்பர
ங்குன்றம் மலை மீது ஏறவோ தடை விதிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியரின் இந்தத் தடை உத்தரவு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த விடாமல் தடுக்கும் வகையில் உள்ளதாகவும், பக்தர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதாகவும் கூறி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவசர மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (நவம்பர் 24) விசாரணைக்கு வந்தன.
வழக்கு விசாரணை தொடங்கியதும், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர் நேரில் ஆஜராகியுள்ளார்களா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாவட்ட ஆட்சியர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், உச்ச நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவது தொடர்பான பணிகளில் ஆட்சியர் ஈடுபட்டுள்ளதால், பிற்பகல் 3 மணிக்கு வழக்கை விசாரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், இந்த விவகாரம் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் விசா
ரணையில் இருப்பதால், உயர் நீதிமன்றம் இதனை விசாரிப்பது முறையாக இருக்காது என்றும் வாதிட்டார்.
இதனால் கடும் அதிருப்தியடைந்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், உயர் நீதிமன்றத்திலிருந்து வெறும் 3 கிலோமீட்டர் தொலைவில்தான் ஆட்சியர் அலுவலகம் உள்ளது. அவர்கள் நேரில் ஆஜராகும் வரை உங்களது வாதத்தைக் கேட்க முடியாது. இந்த வழக்கை நாங்கள் விசாரிப்பது சரியல்ல என நீங்கள் நினைத்தால், நீங்கள் வாதாட வேண்டாம். ஆனால் நாங்கள் இந்த வழக்கை விசாரிப்போம், எனக் கறாராகக் கூறினார்.
நீதிமன்றத்தின் கடும் உத்தரவைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நீதிபதிகள் முன்பு நேரில் ஆஜரானார். அப்போது மனுதாரர்கள் தரப்பில், உச்ச நீதிமன்றம் விரிவான விசாரணைக்குப் பிறகே தீபம் ஏற்ற அனுமதி அளித்தது. ஆனால், தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துவிட்டு, தற்போது 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பது உச்ச நீதிமன்ற அவமதிப்பாகும்.. என வாதிடப்பட்டது.
இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், சீராய்வு மனு தாக்கல் செய்ய அரசுக்கு உரிமை உண்டு. அதே நேரத்தில், உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க மதுரை கலெக்டர் நிஷாந்த் தைரியமாக இருந்தால், அவர் அதனைச் சந்திக்கட்டும்.. எனக் காட்டமாகக் குறிப்பிட்டனர்.
மேலும், தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான காரணங்களை மனுதாரர் வாசித்துக் காட்டியபோது, “இந்த உத்தரவை யார் தயாரித்தாரோ அவரைப் பாராட்ட வேண்டும்.. மிகத் திறமையாகத் தயாரித்து
ள்ளார்கள்” என நீதிபதிகள் நக்கலாகக் குறிப்பிட்டனர்.
தொடர்ந்து வாதிட்ட மற்றொரு மனுதாரர், தடை உத்தரவைக் காரணம் காட்டி ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களைப் போலீசார் கைது செய்து தடுத்து நிறுத்துகிறார்கள். இது அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 25 வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையைப் பறிப்பதாகும் எனக் குற்றம் சாட்டினார். திருநெல்வேலியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கூட இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி சுவாமிநாதன் சுட்டிக்காட்டினார். இது குறித்து ஆட்சியர் தரப்பு வழக்கறிஞரிடம் கேட்டபோது, கைது நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் தன்னிடம் இல்லை என அவர் பதிலளித்தார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நாங்கள் செயல்பட முடியாது. உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைச் செயல்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் மற்றும் கோவில் நிர்வாகத்திற்கு உத்தரவிட எங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டது.
கார்த்திகை தீபத்தன்று அனைவரும் கிரிவலம் செல்லவும், சாமி தரிசனம் செய்யவும் விரும்புவார்கள். இதுபோன்ற தடை உத்தரவுகளால் ஒட்டுமொத்த வழிபாடும் முடங்கிவிடும். பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் அதிகாரிகள் குறுக்கிடக் கூடாது” என அறிவுறுத்தினர்.
இதையடுத்து, வழக்கு விசாரணையை இன்று பிற்பகல் 4 மணிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள், ஆட்சியர் பணியில் இருந்தால் மீண்டும் நேரில் ஆஜராகத் தேவையில்லை எனத் தெரிவித்து விசாரணையைத் தள்ளிவைத்தனர்.
144 தடை உத்தரவை யார் தயாரித்தது? அவரை பாராட்ட வேண்டும்: திருப்பரங்குன்றம் கேசில் நீதிபதி ஜிஆர்.சுவாமிநாதன்
