மதுரையில் தினமும் டெங்கு பாதிப்பு:காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் அமைப்பு

மதுரை, அக். 28-
மதுரையில் நேற்று 3 பேர் டெங்கு காய்ச்சலாலும் 42 பேர் ப்ளூ உட்பட வைரஸ் காய்ச்சலாலும் புதிதாக பாதிக்கப்பட்டனர். தற்போது வரை 13 பேர் டெங்கு காய்ச்சலுக்கும் 112 பேர் காய்ச்சலுக்கும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.
டாக்டர்கள் கூறுகையில் ‘மதுரையில் தினமும் 3 முதல் 5 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். கொதிக்க வைத்து ஆறவைத்த குடிநீரைப் பருக வேண்டும். காய்ச்சல் வந்தால் மருத்துவமனை செல்லவேண்டும். இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும்’ என்றனர்.
கொசு ஒழிக்க 1200 பேர் மாநகராட்சி பகுதியில் காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என கமிஷனர் கவுரவ் குமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
மாநகராட்சி பொது சுகாதார பிரிவு மூலம் வடகிழக்கு பருவ மழையை சமாளிக்கும் முன்ன எச்சரிக்கை நடவடிக்கைகள், காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்த
ப்பட்டுள்ளன. இன்னும் மழை அதிகரிக்கும் சூழல் உள்ளது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கவிடாமல் மக்கள் கவனமாக செயல்பட வேண்டும். குழந்தைகள், வயதானோருக்கு காய்ச்சல் பாதிப்பு வாய்ப்பு அதிகம் உள்ளது.
காய்ச்சல் பாதிப்பு பகுதிகளில் சுகாதார துறை சார்பில் 1200 கொசு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொசு உற்பத்தி ஆதாரங்களை தொடர்ந்து அழித்து வருகின்றனர். மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 10:00 – மதியம் 2:00 மணி வரையிலும், நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் மதியம் 2:00 – மாலை 4:00 மணி வரையிலும் தேவைக்கேற்ப காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்களை நடத்த உத்தர விடப்பட்டுள்ளது என்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன