சீன ஆடை இறக்குமதி அதிகரித்து வருவதால் ஜவுளிச்சந்தை பாதிக்கும்பின்னலாடை உற்பத்தியாளர்கள் கவலை

திருப்பூர், அக். 27-
சீனாவில் இருந்து ஆடை இறக்குமதி தொடர்ந்து அதிகரித்து வருவதால், உள்நாட்டு ஜவுளிச்சந்தை பாதிக்கும்’ என, பின்னலாடை உற்பத்தியா
ளர்கள் கவலை தெரி
விக்கின்றனர்.
வட மாநிலங்களில் உள்ள பிரபல சந்தைகளுக்கு, குறைந்த விலையிலான வெளிநாட்டு ஆடை இறக்குமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வடமாநில சந்தைகளுக்கு, சீனாவில் இருந்து ‘பேப்ரிக்’ மற்றும் மலிவு விலை ஆடைகள் அதிகம் விற்பனைக்கு வந்துள்ளன. வெளிநாட்டு ஆடை இறக்குமதி அதிகரித்து வருவதால், உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர் மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பு, ‘ஜாப் ஒர்க்’ நிறுவனங்களும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால், படிப்படியாக சீன ஆடைகளின் ஆதிக்கம் அதிகரிக்கும்; உள்நாட்டு ஆடை தொழில் நலிவடையும். இதனால், உள்நாட்டு ஆடை உற்பத்தி பாதிக்கும்’ என, ஆடை உற்பத்தி துறையினர் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, பனியன், உள்ளாடை, டி -ஷர்ட், டிராக் பேன்ட் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள் போன்றவற்றுக்கு, குறைந்தபட்ச இறக்குமதி விலை முறையை அமல்படுத்த முடியுமா என, அரசு தீர்மானிக்க வேண்டும். வெவ்வேறு வகையான ஆடைகளுக்கு, ஒரே மாதிரியான குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயிப்பதை தவிர்க்க வேண்டும். வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கம், தொடர்புடைய அமைப்புகள் மற்றும் பங்குதாரர்களை அழைத்து, ஒருங்கிணைந்த கூட்டம் நடத்தி முடிவெடுக்க வேண்டும் எனவும், யோசனை தெரிவிக்கின்ற
னர்.
ஆடைகள் இறக்குமதி செய்வதை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்பது நோக்கமல்ல. குறிப்பிடடு, எந்தவொரு நாட்டையும் குறிவைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாங்கள் சொல்லவில்லை. நியாயமான போட்டி, துல்லியமான இறக்குமதி அறிவிப்புகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையிலான இலக்கு சார்ந்த நடவடிக்கைகள் ஆகியவற்றின் வாயிலாக, இந்தியாவில் அதிகளவில் வேலை வாய்ப்பு வழங்கும் ஆடை உற்பத்தி துறையைப் பாதுகாப்பதே எங்களது நோக்கம். சட்டபூர்வமான வர்த்தகம் மற்றும் நுகர்வோர் நலன், உள்நாட்டு நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தீர்க்கும் வகையில் தான், எந்தவொரு கொள்கை முடிவுகளும் இருக்க வேண்டும். தொழில்துறையினர், தங்களது கருத்துக்களை தெரிவிக்க, சரியான வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என, மத்திய நிதி அமைச்சருக்கு விரிவான கடிதம் அனுப்பியுள்ளோம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன