அருள் விக்னேஷை காப்பாற்ற உடந்தை: கூண்டோடு சிக்கும் தவெக அமைச்சர்கள்- ஆட்டம் காணும் தவெக அரசு

சென்னை, நவ. 25-
பெண் ஐஏஎஸ் அதிகாரி விவகாரத்தில் அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை செய்தியாள
ர்களிடம் பேசுகையில், நேற்றுவரை புகாரே வரவில்லை என்று சாதித்து வந்த அரசு, தற்போது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு
விட்டதாகப் பின்வாங்கியிருப்பது தங்களுக்குக் கிடைத்த வெற்றி எனத் தெரிவித்து
ள்ளார்.
செய்தியா
ளர்களிடம் பேசிய வழக்கறிஞர் இன்பதுரை, “ஒரு பெண்ணின் கௌரவம், சுயமரியாதையைக் காக்க வேண்டும் என்ற நீதிமன்ற
த்தின் அறிவுறுத்தலால் இந்த வழக்கு குறித்து அதிகம் பேச முடியாத நிலையில் இருக்கிறது. ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு நீதியைப் பெற்றுத் தந்த திருப்தியோடு நிற்கிறேன். அண்ணா பல்கலைக்கழகப் பாலியல் வழக்கைப் போலவே, அரசியல் ஆதாயத்திற்காக இல்லாமல் நீதி பெற்றுத் தருவதற்கா
கவே இந்த வழக்கை
யும் தாங்கள் கையில் எடுத்தோம்.
இந்த விவகாரத்தில் ஐஜி தலைமையிலான ஐபிஎஸ் அதிகா
ரிகள் கொண்ட குழு அமைக்கப்ப
ட்டுள்ள நிலையில், அது குறித்த முக்கிய முடிவுகள் வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்ற விசாரணையில் தெரியவரும். “இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை எனச் சாதித்த நிர்மல் குமார், அருண்ராஜ், புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன் உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் குற்றவா
ளிக்குத் துணையாகச் செயல்பட்டுள்ளனர். குற்றவாளிக்கு உடந்தையாக இருந்த அந்த அமைச்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட எம்எல்ஏவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஒரு உயர் அதிகாரிக்கே புகார் அளிக்க முடியாத நெருக்கடியான சூழல் நிலவியதால்தான், வழக்கறிஞர் மூலம் நாங்கள் இந்த வழக்கை முன்னெடுத்தோம். காவல்துறையின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதால் சிபிஐ விசாரணை கோர வேண்டிய நிலை உருவாகி
யுள்ளது. இவ்வளவு நாட்களாக வழக்கைப் பதிவு செய்யாமல் இழுத்தடித்தது யார்? அதிகாரிகளை மிரட்டியது யார் என்ற கேள்விகளை மக்கள் மன்றத்தில் வைப்போம். வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வரும்போது உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும்” என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன