கடந்த 5 ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் கொலை சம்பவங்கள் குறைவு – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தகவல்

சென்னை, நவ. 20-
கடந்த ஐந்து ஆண்டு
களுடன் ஒப்பிடும்போது நடப்பு ஆண்டு கொலை சம்பவங்கள் குறைந்திருப்பது தமிழ்நாடு காவல்துறையின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
அதாவது, ஜனவரி முதல் நவம்பர் 15ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் 2022ஆம் ஆண்டு ஆயிரத்து 484 கொலைகளும், 2023ஆம் ஆண்டு ஆயிரத்து 469 கொலைகளும் நடந்தன. 2024ஆம் ஆண்டு ஆயிரத்து 383 கொலை சம்பவங்களும், கடந்த ஆண்டு ஆயிரத்து 346 கொலை சம்பவங்களும் நடந்தேறிய அதேவேளை
யில் நடப்பு ஆண்டில் நவம்பர் 15ஆம் தேதி வரை ஆயிரத்து 306 கொலை சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாக காவல்துறை தெரிவித்து
ள்ளது.
அதேநேரத்தில் ஜனவரி முதல் அக்டோபர் வரை
யிலான காலக்கட்டத்தில் கடந்த ஆண்டு மொத்தம் ஆயிரத்து 232 கொலை வழக்குகள் பதிவான நிலையில், நடப்பு ஆண்டு ஆயிரத்து 267ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக, குடும்பத் தகராறில் ஏற்பட்ட கொலை குற்றங்கள் 327-இல் இருந்து 360-ஆகவும், வாய் தகராறில் ஏற்பட்ட கொலை குற்றங்கள் 327-இல் இருந்து 360-ஆகவும், குடிபோதை தகராறில் நடந்த கொலைகள் 133-இல் இருந்து 167-ஆகவும் உயர்ந்துள்ளது.
மறுபுறம், முன்விரோதம் காரணமாக நடந்த கொலைகளின் எண்ணிக்கை 95-இல் இருந்து 89-ஆகவும், நிலத்தகராறு கொலைகள் 71-இல் இருந்து 56-ஆகவும் குறைந்திருப்பது காவல்துறையின் தரவுகள் மூலம் தெரியவருகிறது. அதேபோல, ரவுடிகளின் கொலை சம்பவங்கள் 14-இல் இருந்து 11-ஆகவும், இதர காரணங்களுக்கான கொலை சம்பவங்கள் 43-இல் இருந்து 10-ஆகவும் குறைந்துள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை
ப்பொருள் வழக்குகள் 74.32 சதவீதமும், குட்கா பொருட்கள் தொடர்பான வழக்குகள் 3.50 சதவீதமும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை தரவுகள் காட்டுகின்றன.
முன்னதாக, காவல்நிலையங்களுக்கு நேரில் செல்லாமல், ஆன்லைனிலேயே புகார் அளித்து சிஎஸ்ஆர் பெற்றுக் கொள்ளும் புதிய இணையதளத்தை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தொடங்கிவைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவல் நிலைய மரணங்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் டிஜிபி தெரிவித்தார். செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் இதுவரை கிடைத்துள்ள தடயங்களை ஆராய்ந்து வருவதாகவும் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உறுதி அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன